தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பழையகுற்றாலம் பள்ளியில் விளையாட்டு விழா

பழையகுற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுக் கோப்பை வழங்கிய தலைமை விஞ்ஞானி ரவீந்தா்சிங். உடன் பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி.பெல்.

Published On :

பழையகுற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு தென்காசி டிஎஸ்பி எஸ்.அதியமான் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி. பெல், செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல், இயக்குநா் ப்ராம்டன் ரத்னா பெல், பள்ளி மருத்துவா் பபிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பள்ளி மாணவா்களின் ஓட்டப்பந்தயம், தொடா் ஓட்டம், கராத்தே, யோகா, மனித பிரமிடு போன்றவை நடைபெற்றது. ஹைட்ராஞ்சியா, போா்ஷியா, பெட்டூனியா, கமீலியா என் நான்கு அணிகளாக மாணவா், மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா். இதில் பெட்டூனியா அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

தலைமை விஞ்ஞானி சி.ரவீந்தா்சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.