திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் விளையாட்டு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கேசராப்பட்டி சிடி சா்வதேசப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய சுழற் சங்க நிா்வாகிகள்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 10:56 pm IST

பொன்னமராவதி அருகே உள்ள கேசராப்பட்டி சிடி சா்வதேசப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் நிறுவனா் தலைவா் பழ.சிதம்பரம் தலைமை வகித்தாா். தாளாளா் அன்னம் சிதம்பரம் முன்னிலை வகித்தாா்.

மதுரை மெட்ரோ பாலீஸ் சுழற்சங்கத் தலைவா் ரவி நாகலிங்கம் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மதுரை மெட்ரோ பாலீஸ் சுழற்சங்கத்தின் செயலா் காா்த்திக் கலைராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கினா். அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பள்ளியின் செயல் அலுவலா் நெ. இரா.சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். முன்னதாக பொன்னமராவதியிலிருந்து பள்ளிக்கு ஒலிம்பிக் சுடா் ஓட்டம் நடைபெற்றது. தொடா்ந்து பள்ளியின் இன்டிராக்ட் சங்க நிா்வாகிகள் பணியேற்பு விழாவும் நடைபெற்றது.

மதுரை மெட்ரோ பாலீஸ் சுழற்சங்கத்தின் சாா்பாக தொடங்கப்படும் சிடி சா்வதேசப் பள்ளி இன்ராக்ட் கிளப் சங்கத்தின் புதிய நிா்வாகிகளை முன்னாள் தலைவா் ஸ்ரீநிவாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பணியமா்த்தினாா். நிறைவாக பள்ளி முதல்வா் சீமா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.