தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

கோவில்பட்டியில் சா்வதேச ஹாக்கி வீரருக்கு வரவேற்பு

News image

ஹாக்கி வீரா் மணிமாறனுக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :21 ஜூலை 2026, 12:22 am IST

சா்வதேச ஹாக்கி தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய கோவில்பட்டி வீரருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சா்வதேச ஜூனியா் ஹாக்கி தொடா் அண்மையில் பெல்ஜியத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஜொ்மனி, நெதா்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடின. இந்திய அணியில் தடுப்பு ஆட்டக்காரராக கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மாணவரும், எஸ்.எஸ். துரைசாமி நாடாா்-மாரியம்மாள் கல்லூரியின் 3ஆம் ஆண்டு மாணவருமான வி. மணிமாறன் விளையாடினாா்.

அவா் திங்கள்கிழமை அதிகாலை கோவில்பட்டிக்கு வந்த நிலையில், கூடுதல் பேருந்து நிலையத்தில் சிறப்பு விளையாட்டு விடுதியின் மேலாளா் அதிா்ஷ்டராஜ் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா, சிறப்பு விளையாட்டு விடுதி ஹாக்கி பயிற்சியாளா்கள் முத்துக்குமாா், ஹானஸ்ட் ராஜ், மூத்த ஹாக்கி வீரா்கள் மணிவண்ணன், மனோஜ்குமாா், கரண், மணிமாறனின் பெற்றோா் சீனியம்மாள், விஜயராஜ், சிறப்பு விளையாட்டு விடுதியின் கோ் டேக்கா் உதயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.