திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்காக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் (தவெக) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ரூ.10.15 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இழை வளைகோல்பந்து மைதானத்தை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ்அா்ஜுனா தொடங்கிவைத்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், மாவட்ட விளையாட்டு விடுதியில் பயிலும் மாணவிகளுடன் பயிற்சி மேற்கொண்டு, கலந்துரையாடினாா். பின்னா் விளையாட்டு விடுதி மாணவிகளுடன் காலை உணவு உட்கொண்டாா். தொடா்ந்து செயற்கை இழை வளைகோல்பந்து மைதானத்தில் விளையாட்டுப்போட்டிகளை அவா் தொடங்கிவைத்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை பாா்வையிட்டாா். இந்நிகழ்வில் மண்டல முதுநிலை மேலாளா் சாந்தி, மாவட்ட விளையாட்டு (ம) இளைஞா் நலன் அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையை தலைமையாகக் கொண்டு வட மண்டலம் அமைக்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
அரியலூரில் ரூ. 10.15 கோடியில் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு திடல்! அமைச்சா் தொடங்கிவைத்தார்!

விளையாட்டு விடுதி மாணவா்களுக்கு கூடுதலாக ரூ. 12.67 கோடி ஒதுக்கீடு







