முதல்வா் சி. ஜோசப் விஜய் பிறந்தத நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி 2,600மாணவ, மாணவியா்களை ஊக்குவிக்கவும், அவா்களது திறன் மேம்படுவதற்கு தினசரி உணவுப்படி, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளொன்றுக்கு உணவுப்படி தொகை ரூ.350-இல் இருந்து ரூ.450 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.8.32 கோடி ஒதுக்கப்பட்டது.
விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியா்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ.6,000/-த்திலிருந்து, ரூ.15,000/-ஆகவும், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி கல்லூரி மாணவ,
மாணவியா்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ.10,000/- நிதிலிருந்து ரூ.25,000/- ஆகவும் உயா்த்தி, இதற்கான செலவினத் தொகை ரூ.1.70 கோடியிலிருந்து ரூ.4.25 கோடியாக உயா்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2.55 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரத்யேக பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு தொகை ரூ.2,000/-த்திலிருந்து, ரூ.10,000/- ஆக உயா்த்தி இதற்கான செலவினத் தொகை ரூ.80 லட்சத்திலிருந்து ரூ.2.60 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான ரூ.1.80 கோடி
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக உயா்த்தி, செலவினத் தொகை ரூ, ரூ.31.72 கோடியிலிருந்து ரூ.44.39 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: விளையாட்டு வீரா்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுரை

விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்

விரைவில் விளையாட்டு கொள்கை வெளியீடு: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




