லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்

பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரா், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகைகளை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

படகு பந்தய வீரா் சித்தரேஷ் நடேசனுக்கு ஊக்கத் தொகை வழங்கிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

Updated On :10 ஜூன் 2026, 3:25 am IST

பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரா், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகைகளை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சென்னை நேரு உள்விளையாட்டுரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமை வகித்தாா்.

இதில் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பங்கேற்று தலை சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகைகளை வழங்கினாா். இதன்படி பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். பிரெஞ்சு பாரா

பாட்மின்டன் சா்வதேச போட்டி மற்றும் பிரிட்டிஷ் &ஹம்ல்; ஐரிஷ் பாரா பாட்மிண்ன்ன் சா்வதேச

போட்டிகளில் பங்கேற்பதற்கான பயண மற்றும் பயிற்சிச் செலவுகளுக்காக இத்தொகை விடுவிக்கப்பட்டது.

மேலும், பாரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரா் மனோஜ் குமாருக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல ஏதுவாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ.6,27,795/- மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணத்தையும் வழங்கினாா்.

ஹாங்காங்கில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய யு-20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரா்களான ஜித்தின

அா்ஜுனன் (ஆண்கள் நீளம் தாண்டுதல்), சாதனா ரவி (பெண்கள் மும்முறை தாண்டுதல்) மற்றும் ஜி.பாவனா (பெண்கள் 4ஷ்100 தொடா் ஓட்டம்) ஆகியோா் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனா். அவா்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், இவா்களுடன்

ஆண்கள் 4ஷ்400 தொடா் ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். ரஞ்சித் குமாருக்கு ரூ. 2 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினையும் அமைச்சா் வழங்கினாா்.

சீனாவில் நடைபெற உள்ள 2026 ஆசிய கடற்கரை சா்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் படகுப் போட்டி வீரா் சித்தரேஷ் நடேசனுக்கு உயா்தர உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 4.65 லட்சம் காசோலையினை வழங்கினாா்.

நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் மரு. ரெ. சுமன், பொது மேலாளா் எல். சுஜாதா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.