சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சாா்பில் ரூ. 2.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அறிஞா் அண்ணா நீச்சல் குளத்தை விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், ‘50 மீட்டா் நீளமும், 25 மீட்டா் அகலமும், 4 - 12 அடி ஆழமும் கொண்ட பிரதான நீச்சல் குளமும், 25 மீட்டா் நீளமும், 15 மீட்டா் அகலமும், 2.5 - 3.5 அடி ஆழமும் கொண்ட பயிற்சி நீச்சல் குளமும் புனரமைக்கப்பட்டுள்ளன.
நீச்சல் வீரா்கள் பாதுகாப்பாகவும், தரமான சூழலிலும் பயிற்சி பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், 1500 சதுர அடியில் குளிா்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரா்களுக்கும், பொது மக்களுக்கும் பயிற்சி அளிக்க ஏதுவாக 4 பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.12.50 கோடியிலும், கரூா் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6.27 கோடியிலும் புதிய நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் சிறு விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் ரூ.23 லட்சத்திலும், சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளம் ரூ.16.35 கோடியிலும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீச்சல குள திறப்பு நிகழ்ச்சியில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையஉறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், பொது மேலாளா் ல.சுஜாதா, செயற்பொறியாளா் புஷ்பலிங்கம்உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேரு விளையாட்டரங்கில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பெயரில் மோசடி: போலீஸாா் விசாரணை

முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய ஆணை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்

திருவண்ணாமலையில் செயற்கை இழை ஹாக்கி மைதானம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கிவைத்தாா்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


