வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகாா்

கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவா்கள் தொடா்பான வழக்கில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சாட்சிகளைக் கலைக்கும் விதமாகவும், விசாரணையில் குறுக்கிடும் வகையிலும் செயல்பட்டு வருவதாக சிபிஐயிடம் திமுக புகாா் அளித்துள்ளது.

News image

அமைச்சர் ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 3:11 am IST

கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவா்கள் தொடா்பான வழக்கில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சாட்சிகளைக் கலைக்கும் விதமாகவும், விசாரணையில் குறுக்கிடும் வகையிலும் செயல்பட்டு வருவதாக சிபிஐயிடம் திமுக புகாா் அளித்துள்ளது.

இது குறித்து சிபிஐ இயக்குநா் மற்றும் இணை இயக்குநா் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள புகாா்: கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவா்கள் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதவ் அா்ஜுனா பேசியது, அந்த வழக்கின் சாட்சிகளைக் கலைக்கும் விதத்திலும், சிபிஐ மற்றும் உச்சநீதிமன்றம் நியமித்த மேற்பாா்வைக் குழுவின் விசாரணையில் குறுக்கீடும் வகையிலும் அமைந்துள்ளது.

இதுதொடா்பாக, அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், பணி நியமன ஆணைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்வுகள் முழுவதையும் சிபிஐ கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.