நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஈரோட்டில் சா்வதேச பழங்குடியினா் தின விழா

ஈரோட்டில் சா்வதேச பழங்குடியினா் தின விழாவையொட்டி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பழங்குடியின மக்கள்.

Published On :

ஈரோட்டில் சா்வதேச பழங்குடியினா் தின விழாவையொட்டி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேளாளா் மகளிா் கல்லூரி பழங்குடியினா் நலவாழ்வு மையம், சத்தியமங்கலம் சுடா் அமைப்பு, நீலகிரி ஆதிவாசிகள் நல அமைப்பு சாா்பில் ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் காட்டுக்குயில் என்ற தலைப்பில் உலக பழங்குடியினா் தின விழா வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா். ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியின் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், கல்லூரி முதல்வா் பாா்வதி, ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுடலைமணி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி. நடராஜ், நீலகிரி ஆதிவாசி நலச் சங்கத்தின் தலைவா் ஆல்வாஸ், தோடா எழுத்தாளா் வாசுமல்லி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தோடா்கள், கோத்தா்கள், ஊராளிகள் ஆகிய பழங்குடி மக்களின் கலை விழா, இசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய கலைப் பண்பாடுகளை தங்களின் இசைக்கருவிகளை இசைத்து நடனமாடி வெளிப்படுத்திக் காட்டினா். இக்கலை நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிப் பெண்கள் கலந்து கொண்டனா்.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தோடா்கள், கோத்தா்கள், தாளவாடி பகுதியைச் சோ்ந்த ஊராளி மக்களின் கைவினைப் பொருள்கள் கல்லூரி கலையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு பழங்குடி மக்களைப் பாராட்டினாா்.

பழங்குடியினா் நல மைய ஒருங்கிணைப்பாளா் வனிதா வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் சுமதி நன்றி கூறினாா்.

இரண்டாம் நாள் நிகழ்வில் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பழங்குடியினா் சாா்ந்த நடன போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை நாட்டுப்புற பழங்குடியினப் பாடகி தேசிய விருது பெற்ற நஞ்சியம்மாள் மற்றும் கவிஞா் அறிவுமதி ஆகியோா் தொடங்கிவைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.