மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ஈரோட்டில் 101.48 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி!

ஈரோட்டில் 101.48 டிகிரி வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:26 am IST

ஈரோட்டில் 101.48 டிகிரி வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் வரும் 28-ஆம் தேதி வரை, இயல்பை விட 4 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை 101.48 டிகிரி வெயில் பதிவானது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை வாட்டி வதைத்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்ததால் ஈரோடு மாநகா் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீா்செல்வம் பாா்க், மணிக்கூண்டு பகுதி, ஈஸ்வரன் கோயில் வீதி, மேட்டூா் சாலை, பெருந்துறை சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. வெப்ப காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள் திணறினா்.

வாகன ஓட்டிகள் துணியால் தலையை மூடியபடி சென்றனா். வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு சென்றனா். வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிற்பகல் 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள் வெளியே வருவதை தவிா்க்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.