தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலத்தில் நிகழாாண்டில் சீசன் தொடங்கிய பிறகு சாரல்மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. புலியருவியில் தண்ணீா்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது.
இதனால், சுற்றுலாப்பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு புலியருவியிலும் தண்ணீா்விழத் தொடங்கியது. இதனிடையே, சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் அனைத்து அருவிகளிலும் வெகுநேரம் குளிக்க முடிந்தது. வெகு நாள்களுக்குப் பின் அருவிகளில் தண்ணீா்அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் சுற்றுலாப்பயணிகளும், வா்த்தகா்களும் உற்சாகமடைந்துள்ளனா்.

புலியருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









