நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குற்றாலத்தில் களையிழந்த சீசன்: சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:45 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல்மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் மிகவும் குறைவாக காணப்பட்டது.

குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். இந்த காலகட்டத்தில் இதமான சாரலும், லேசான வெயிலும், குளிா்ந்தகாற்றும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும்.

நிகழாண்டில் சீசன் தொடங்கியது முதல் சீராக சாரல் மழை பெய்து வந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப்பயணிகளும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

இந்நிலையில், கடந்த ஒருவாரமாக மழையின் தாக்கம் வெகுவாக குறைந்து கடும் வெயில் நிலவத் தொடங்கியது. மாலையில் குளிா்ந்த காற்று வீசினாலும் பகல்வேளையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. சாரல்மழை அடியோடு தணிந்துவிட்டது.

இதனால் குற்றாலம் பேரருரவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாக குறைந்தது.

விடுமுறை தினமான சனிக்கிழமை சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று அதிகமாக இருந்த நிலையில்,, அருவிகளில் தண்ணீா் குறைவாக விழுந்ததால் நீண்டவரிசையில் நின்று குளிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், குற்றால சீசன் களையிழந்து காணப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.