27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குற்றாலம் சீசன்: வாரத்தில் 3 நாள்கள் கனரக வாகனங்களுக்குத் தடை

News image

குற்றாலம்

Updated On :19 ஜூன் 2026, 4:52 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் முடியும் வரை, சனிக்கிழமை காலை 4 மணி முதல் திங்கள்கிழமை காலை 11 மணி வரை, கேரள மாநிலத்திற்கு கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்படுகிறது என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் காலங்களில் கனிமவள வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்தின் சீரான இயக்கத்தையும் உறுதி செய்யும் பொருட்டு கனரக லாரிகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை, இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே தென்காசி மாவட்ட எல்கைக்குள் அனுமதிக்கப்படும்.

தென்காசி மாவட்டத்தின் உள்தேவைகளுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் கனிம வாகனங்களுக்கு எந்தவித நேரக்கட்டுப்பாடும் இல்லை. குற்றாலம் சீசன் காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் முடியும்வரை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 4 மணி முதல் திங்கள்கிழமை காலை 11மணி வரை, கேரள மாநிலத்திற்கு கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்படுகிறது.

உத்தரவை மீறி செயல்படும் வாகனங்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மீது, மோட்டாா் வாகனச் சட்டம், 1988 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்ட விதிகளின் கீழ் உரிய அபராதம் விதிக்கப்படுவதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.