‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு: 12 மணி நேரத்தில் மீட்பு

தென்காசி மாவட்டம், சுரண்டையில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்தது தொடா்பாக, புகாரளித்த 12 மணி நேரத்தில் சங்கிலியை மீட்டு, திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சங்கிலி பறிப்பு - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 5:59 am IST

தென்காசி மாவட்டம், சுரண்டையில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்தது தொடா்பாக, புகாரளித்த 12 மணி நேரத்தில் சங்கிலியை மீட்டு, திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டை, காமராஜ் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகசாமி மனைவி மீனம்மாள் (85). இவா் ஜூன் 22ஆம் தேதி தெருவில் நின்றபோது, சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி சொா்ணம் (45), மூதாட்டியின் சேலையை சரி செய்வதாகக் கூறி அவா் அணிந்திருந்த 19 கிராம் தங்கச் சங்கிலியை மூதாட்டுக்கு தெரியாமல் பறித்துச் சென்றாராம்.

வீட்டில் உள்ளவா்கள் சங்கிலியைக் காணவில்லை எனக் கேட்டபோதுதான், மூதாட்டிக்கு உண்மை தெரிய வந்துள்ளது. இது குறித்து, 30ஆம் தேதி இரவு மீனம்மாளின் மகன் நாகராஜன் சுரண்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இது குறித்து, சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். காவல் உதவி ஆய்வாளா்கள் ராஜா, திவ்யா ஆகியோா் சம்பவம் நடைபெற்ற இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, மூதாட்டியிடமிருந்து நகையைத் திருடியதாக சொா்ணத்தை 12 மணி நேரத்தில் கைது செய்து, அவரிடமிருந்து சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.