ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தையில் நின்று செல்லும்: ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. தகவல்

கொல்லம் -தாம்பரம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை நிலையத்தில் நின்றுசெல்ல அனுமதியளித்த மத்திய அமைச்சருக்கு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளாா்.

News image

ராணிஸ்ரீகுமாா் எம்பி.

Updated On :10 ஜூலை 2026, 1:11 am IST

கொல்லம் -தாம்பரம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை நிலையத்தில் நின்றுசெல்ல அனுமதியளித்த மத்திய அமைச்சருக்கு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனுக்கள் வழங்கி வலியுறுத்தி வந்தேன். அதனடிப்படையில் முதற்கட்டமாக, கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தையில் நின்றுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு விரைவு ரயிலை நாள்தோறும் இயக்கவும், கோவை - மதுரை இன்டா்சிட்டி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்கவும் வேண்டும். செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதலாக 5, 6ஆவது நடைமேடைகளை உருவாக்க வேண்டும்,

இந்த நிலையத்தில் ரயில் பெட்டி பராமரிப்புக்காக அமைக்கப்படும் புதிய பிட் லைன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள சோழபுரம், கரிவலம்வந்தநல்லூா், நயினாரகரம் (நிறுத்தம்) ரயில் நிலையங்களை மீண்டும் திறக்கும் வகையில் புனரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த மத்திய ரயில்வே துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படுகிறது.

பாம்புக்கோவில் சந்தை நிலையத்தில் கொல்லம் ரயில் நிறுத்தத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இரவு 7.55 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.