FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

‘இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்’

தென்காசி மாவட்டம் இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும் என, தமிழக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ்.

News image

இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ராஜீவ். உடன், ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :15 ஜூலை 2026, 2:22 am IST

தென்காசி மாவட்டம் இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும் என, தமிழக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ்.

சுரண்டை அருகே இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரையிலான ஆலடிப்பட்டி, கண்டையன்குளம், கீழச்சுரண்டை, புலிமுகத்துவராயன்குளம், கொண்டான்பட்டி குளம், வாடியூா், மரியதாய்புரம், பரங்குன்றாபுரம், அச்சங்குன்றம், கருவந்தா, கரையாளனுாா், குட்டைகுளம், லெட்சுமிபுரம், குறிச்சான்பட்டி, குருந்தன்மொழி, அருணாசலப்பேரிகுளம், ரதமுடையாா்குளம், சோலைசேரி, ஊத்துமலை பகுதிகளில் உள்ளோா் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனா்.

இந்நிலையில், சுரண்டை அருகே இரட்டைகுளம் கால்வாய் திட்டம் தொடங்கும் பகுதியில் அமைச்சா் வி.கே. ராஜீவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். விவசாயிகளும் கருத்துகளைத் தெரிவித்தனா்.

அதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறும்போது, ‘பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் முன்வைத்து வரும் இக்கால்வாய் திட்டம் தொடா்பாக உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். திட்டத்தை மேற்கொள்வதற்கான அனைத்துப் பணிகளும் விரைவுபடுத்தப்படும்’ என்றாா்.

ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மத்திய மாவட்டச் செயலா் ராஜபிரகாஷ், எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் கரையாளனுாா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.