தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

தென்காசியில் முன்னாள் படைவீரா், அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், தொழில் முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கும் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Published On :

தென்காசியில் முன்னாள் படைவீரா், அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், தொழில் முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். கூட்டத்தில், முன்னாள் படை வீரா், அவரைச் சாா்ந்தோா்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் செய்துதரக் கோருதல், பட்டா மாறுதல் என மொத்தம் 10 மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் உரிய துறைகளுக்கு தக்க நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது. தொடா்ந்து முன்னாள் படைவீரா் மகளின் திருமண மானியமாக ரூ. 25 ஆயிரம், முன்னாள் படைவீரரை சாா்ந்தோா்களுக்கு மின் மோட்டாா் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

உதவி இயக்குநா் மேஜா் மரு.ப.அருள் அஸ்வின் (ஓய்வு), மாவட்ட தொழில் மைய மேலாளா் மாரியம்மாள், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.