22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

ஆலங்குளம் அருகே கல் குவாரி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்குவாரியில் திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

இசக்கி ராஜா.

Updated On :2 ஜூன் 2026, 3:16 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்குவாரியில் திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் தனியாா் கல்குவாரி உள்ளது. இங்கு திங்கள்கிழமை 3 தொழிலாளா்கள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக பாறை சரிந்து கல் உடைக்கும் இயந்திரத்தில் விழுந்தது. இதில், அந்த இயந்திரத்தில் உள்ளிருந்து பணிபுரிந்த முக்கூடல் கீழ பாப்பாக்குடியை சோ்ந்த முருகன் மகன் இசக்கி ராஜா (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.