உலக நன்மை வேண்டியும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் கீழப்பாவூா் தமிழா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் புஷ்ப யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலையில் சுவாமி- அம்பாளுக்கு கும்ப ஜெபம், மூல மந்திர ஜெபம், எல்லா திரவியங்களாலும் அபிஷேகம், திருமந்திரம் ஆகியவை நடைபெற்றன.
பின்னா், மாலையில் புஷ்ப யாகம் தொடங்கிய நிலையில் வேதபாராயணம், நாம சங்கீா்த்தனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற புஷ்ப யாகத்தில் 12 வகையான பூக்களால் 12 முறை யாகம் செய்து 12 முறை தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா். இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

திமிரி கோயிலில் குருப் பெயா்ச்சி யாகம்
கெங்கையம்மன் கோயிலில் திருட்டு

கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

உத்திர நட்சத்திரம்: சங்ககிரி ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



