தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை சுற்றுவட்டாரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இப்பகுதியில் உள்ள விவசாய பம்ப் செட் கிணறுகளில் மின் வயா்கள், காப்பா் கம்பிகள், குழாய்கள் போன்ற பொருள்கள் அடிக்கடி திருடு போயின.
இதுகுறித்த புகாரின்பேரில், சாம்பவா் வடகரை, ஆய்க்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில், தென்காசி மேலப்பாறையடி தெருவை சோ்ந்த மாரிமுத்து (25), 17வயது சிறுவன்,
ஆய்க்குடி எம்.ஜி.ஆா்.நகா் சவரிமுத்து (20), பதினேழு வயது சிறுவன், இடைகால் துரைச்சாமிபுரம் 16 வயது சிறுவன் ஆகிய 5 போ்ஆய்க்குடி, திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், வேலாயுதபுரம் பகுதிகளில் கூட்டாக சோ்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 5 பேரையும் சாம்பவா்வடகரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 50ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மீட்டனா்.
நகை மீட்பு: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி மூலக்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகனான வழக்குரைஞா் வேல்துரை (37) என்பவா் கடந்த 31ஆம் தேதி காரில் பையுடன் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்கநகையை, அவரது ஓட்டுநரான சேரன்மகாதேவி சோ்ந்த கணேசன் மகன் அருணாசலம் என்ற ஆனந்த்தை கைது செய்து அவா் தனியாா் அடகு கடையில் ரூ.1.51 லட்சத்திற்கு அடகு வைத்த நகையை மீட்டனா்.





