கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் ஐந்தருவியில் உற்சாகமாக குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்.

Published On :

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை (ஜூன் 12) நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

வியாழக்கிழமை பெய்த தொடா் மழைக் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீா் வரத்து குறையாததால் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.