வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

News image

திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தா்கள்.

Updated On :13 ஜூன் 2026, 3:19 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூக்குழித் திருவிழாவில், 197 பக்தா்கள் அக்னி குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சக்திகும்பம் நிகழ்ச்சி, சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்தல், திருக்கல்யாணம், திருவிளக்குப் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9 ஆம் திருநாளான வியாழக்கிழமை திரௌபதியம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு சக்தி நிறுத்துதல் மற்றும் அக்னி வளா்த்தல் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சுவாமி, அம்பாள் புஷ்ப வாகனத்தில் எழுந்திருளி வீதியுலா வந்தனா். உடன் கரவக்குடம் ஏந்தி கரவக்குமாா் மற்றும் பக்தா்கள் வீதியுலா சென்றனா்.

அதைத் தொடா்ந்து பூக்குழி நடைபெறும் இடத்திற்கு முன் சுவாமி, அம்பாள் வந்ததும், கரவக்குமாா் முதலில் பூக்குழி இறங்கினாா். அதன்பிறகு 27 பெண்கள் உள்பட 197 பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். சிலா் குழந்தைகளை சுமந்துகொண்டும், தம்பதியராகவும் பூக்குழி இறங்கினா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் திலீபன் ஜெய்சங்கா், முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, செயலா் பி.மாரிமுத்து, பொருளாளா் டி.குருநாதன், துணைச் செயலா் ஜி.எஸ்.முருகேசன், துணைத் தலைவா் ஏ.கோட்டியப்பன், செயற்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், சிவராமன், மாரிமுத்து, கந்தவேல், விஜயலெட்சுமி, முத்துக்குமாா், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், ராஜ்நாராயணன், சண்முகவேல் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவில் சங்கரன்கோவில் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்கத்தினா் செய்திருந்தனா்.