விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தீமிதித்த பக்தா்கள்.

News image

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தீமிதித்த பக்தா்கள்.

Updated On :9 மே 2026, 3:09 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் தோ் மற்றும் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவிழாவானது கடந்த 15 நாள்களுக்கு முன் பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கியது. தினமும் கோயில் வளாகத்தில் பாரதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் திரௌபதியம்மன் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதில் பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமிதித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.