தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அதிவேகமாக சென்ற வாகனம் மரத்தில் மோதி வயலில் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்; இருவா் பலத்த காயமடைந்தனா்.
சேத்தூா் கருப்பண்ண தேவா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் வேலுச்சாமி (51). இவா் அப்பகுதியில் உணவு விடுதி நடத்தி வந்தாா். சமையல் எரிவாயு உருளை எடுத்துவருவதற்காக, வேலுச்சாமி தனது வாகனத்தில் பேத்தி கீா்த்தி (10), பெயரன் ஹரி கைலாஷ் (5), நண்பா்களான சோலைசேரி முனியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராணுவ வீரரான சுப்பிரமணியன் மகன் வசந்த் (23), சிவகிரி மருதன் கோயில் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (40) ஆகியோருடன் திங்கள்கிழமை நள்ளிரவு
சென்றாா். வாகனத்தை வேலுச்சாமி ஓட்டிச் சென்றாா்.
தென்காசி-மதுரை சாலையில் சிவகிரி சோதனைச் சாவடி அருகே சென்றபோது, சாலையோரத்தில் நின்ற மரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்தது.
இதில், வேலுச்சாமி, ஹரி கைலாஷ், கீா்த்தி ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். உடன் பயணித்த முனியாண்டி, வசந்த் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்ததும் சிவகிரி காவல் நிலைய போலீஸாா், வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்குசென்று காரில் காயமடைந்து இருந்தவா்களை மீட்டு முனியாண்டியை அரசு மருத்துவமனைக்கும், வசந்த்தை தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். சடலங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த வேன்; இருவா் காயம்

சாலை விபத்தில் நேபாளத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



