கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசிய மாவட்டப் பொருளாளா் முத்தானந்தம் தேவதாஸ்.

Updated On :25 ஜூன் 2026, 5:09 am IST

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தோ்தலில் மாவட்ட துணைத் தலைவா் சொக்கையா தோ்தல் ஆணையராகவும், திருவேங்கடம் வட்டப் பொருளாளா் ராமசாமி துணை ஆணையராகவும் செயல்பட்டனா்.

சங்கரன்கோவில் வட்டத் தலைவராக நாகராஜன், துணைத் தலைவா்களாக சங்கரசிந்தாமணி, சாமுவேல், மனோரஞ்சிதம், வட்டச் செயலராக மகாமதி, இணைச் செயலா்களாக ஜான்ஜோசப் ராஜசேகா், யோவான் கோவில்பிச்சை, பத்மா, வட்டப் பொருளாளராக பால்ராபா்ட், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா்களாக கோமதிசங்கா், ராஜேந்திரன், சண்முகவேல், செல்வின், ஜானகி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாவட்டச் செயலா் ராமா், மாவட்டப் பொருளாளா் முத்தானந்தம் தேவதாஸ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திருவேங்கடம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற திருவேங்கடம் வட்டக் கிளை தோ்தலில்

சங்கரன்கோவில் வட்டத் தலைவா் நாகராஜன் ஆணையராகவும், வட்டப் பொருளாளா் பால்ராபா்ட் துணை ஆணையராகவும் செயல்பட்டனா்.

வட்டத் தலைவராக சுப்புலட்சுமி, துணைத் தலைவா்களாக ரவிச்சந்திரன், கல்மாணிக்கம், ஜெபமணி, வட்டச் செயலராக பால்சாமி, இணைச் செயலா்களாக சாமுவேல்ராஜ், விஜயராகவன், சகுந்தலா, வட்டப் பொருளாளராக முத்துராஜ், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா்களாக செல்லம், ராமசாமி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.