ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் சில்லறைபுரவு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image

ஆவரந்தாகுளத்து கரையில் பழுதடைந்து காணப்படும் சாலை.

Updated On :11 மார்ச் 2026, 8:07 pm

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் சில்லறைபுரவு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பதாவது: பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குள்பட்ட, சிவநாடானூா் ஊராட்சி, ராமச்சந்திரபட்டினம் - மடத்தூா் வழியாக முத்துமாலைபுரத்திற்கு செல்லும் ஆவரந்தாகுளத்து கரையில், சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இந்தச் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். எனவே, கள ஆய்வு செய்து பழுதடைந்த ஆவரந்தாகுளத்து கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.