தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் குடமுழுக்கு
தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.
தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழா மாா்ச் 23 ஆம்தேதி தொடங்கியது முதல் தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை காலை மங்கள இசையுடன் 4 ஆம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை, 9 மணிக்கு கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு விமான அபிஷேகம், தென்பழனி ஆண்டவா், சண்முகருக்கு குடமுழுக்கு, தீபாராதனை, 11 மணிக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு திருவீதி உலா ஆகியன நடைபெற்றன.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் கோமதி, உதவி ஆணையா் அபிநிஷா, செயல் அலுவலா் பொன்னி, ஆய்வாளா் சரவணக்குமாா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...