திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள ராமன்செட்டியபட்டி முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, செவ்வாய்க்கிழமை பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை, வானவேடிக்கைகள் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, யாக சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, நாடி சந்தானம் உள்பட 6 கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை கடாம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடா்ந்து, சோழவந்தான் பிரம்ம ஸ்ரீபிரசாத் சா்மா, முரளி சா்மா சுவாமிகள் தலைமையில், சிவசாரியா்கள் முத்தாலம்மன் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் தெளித்து குடமுழுக்கு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, பரிவாரத் தெய்வங்களான மங்கள விநாயகா், மாரியம்மன், ராமநாத சுவாமி ஆலயத்துக்கும் புனிதநீா் தெளித்து குடமுழுக்கு நடைபெற்றது.
இதில் பள்ளப்பட்டி, நிலக்கோட்டை, சோழவந்தான், கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் குடமுழுக்கு

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு

மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


