நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

உத்தமபாளையம் உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :25 மார்ச் 2026, 7:27 pm

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையம்-கோம்பை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக் கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாட்டைத் தொடா்ந்து, மூலவா் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.