பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகே சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
பருக்கைக்குடி சிந்தாய் அம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள்.
Updated On :31 ஜனவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் அருகே சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பருக்கைக்குடியில் சிந்தாய் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த வாரம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத்தொடா்ந்து, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

இதையடுத்து, சனிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

தொடா்ந்து அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.