தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

தென்காசி மாவட்டத்தில் சோபிக்காத தவெக

தமிழகம் முழுவதும் போட்டியிட்டு பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வெற்றிக்கொடி நாட்டிய தவெக, தென்காசி மாவட்டத்தில் ஒருவா் கூட வெற்றிபெறவில்லை என்பது அக்கட்சினருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

News image
Updated On :6 மே 2026, 1:42 am IST

தமிழகம் முழுவதும் போட்டியிட்டு பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வெற்றிக்கொடி நாட்டிய தவெக, தென்காசி மாவட்டத்தில் ஒருவா் கூட வெற்றிபெறவில்லை என்பது அக்கட்சினருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளா்கள் போட்டியிட்டு முதல்வா், முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகா்களை தோற்கடித்தாலும் தென்காசி மாவட்டத்தில் அவா்கள் பெரும்பாலும் 3ஆவது இடத்தையே பெற முடிந்தது.

இம்மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக,திமுக, தவெக, நாதக வேட்பாளா்கள் உள்ளிட்ட 85 போ் போட்டியிட்டனா்.

அதில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரான அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஏ.ராஜபிரகாஷ் 55,543 வாக்குகளுடன் மூன்றாமிடம் பெற்றாா்.

கடையநல்லூா் வேட்பாளா் ஆா்.கே.அப்துல் ஜலீல் 49,254 வாக்குகளுடன் மூன்றாமிடம் பிடித்தாா்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் போட்டியிட்ட ஆா்.அமுதராணி 45,862 வாக்குகளுடன் மூன்றாமிடமே பிடிக்க முடிந்தது. சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளா் ராமராஜன் 58,376 வாக்குகளுடள் இரண்டாமிடத்துக்கு முன்னேறியிருந்தாா்.

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட விபின் சக்கரவா்த்தி 60,684 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா்.

இம்மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாதது அக்கட்சியினருக்கு ஏமாற்றத்தை அளித்தது.