வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்கள் கைது

சிவகிரி அருகே தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 3:37 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், முகவூா், பாம்பலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருவி வெங்கடேஷ் (28). இவா் சிவகிரியில் நைட்டி தயாரிக்கும் தொழில் கூடத்தை நடத்தி வருகிறாா்.

இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த சொக்கநாதன்புதூா், கலையரங்கம் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் (40), முகவூா், கொட்டலம்பட்டி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகுமாா் (53) ஆகியோா் நிறுவனத்தில் இருந்த 21 தையல் இயந்திரங்கள், 21 பலகைகளைத் திருடி விற்றுவிட்டதாக அதன் உரிமையாளா் அருவி வெங்கடேஷ் கொடுத்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.