உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பாவூா்சத்திரம் சந்தையில் காய்கனிகள் விற்பனை மந்தம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள காய்கனிகள்.

Updated On :14 மே 2026, 3:38 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இச்சந்தைக்கு, உள்ளூா் மட்டுமன்றி கீழப்பாவூா், வீரகேரளம் புதூா், சுரண்டை, நாகல்குளம், கழுநீா் குளம், கடையம் பகுதிகளில் இருந்து காய்கனிகள் கொண்டுவரப்படும். தற்போது இப்பகுதிகளில் இருந்து காய்கனிகள் வரத்து குறைவாக இருப்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கனிகள் கொண்டு வரப்படுகின்றன.

தென்மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழை இப்பகுதியிலும் நீடித்தால் காய்கனிகள் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரிக்கும். காய்கனி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என்கின்றனா் வியாபாரிகள்.

புதன்கிழமை நிலவரப்படி விலை நிலவரம் ( ஒரு கிலோவுக்கு): வெண்டைக்காய் ரூ. 17, சீனி அவரைக்காய் ரூ. 12, புடலங்காய் ரூ. 35, அவரைக்காய் ரூ. 60, சுரைக்காய் ரூ. 7, பூசணிக்காய் ரூ. 12, பயிறு ரூ. 43, தக்காளி ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 35, சேனைக்கிழங்கு ரூ. 12, சேமங்கிழங்கு ரூ. 15, மிளகாய் ரூ. 28 என்ற அளவில் விற்பனையானது.

Story image
Story image