இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

குற்றாலத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :21 மே 2026, 5:51 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்துப் பேசியதாவது:

குற்றாலத்தில் சீசன் தொடங்கவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். எனவே, குற்றாலத்தில் அனைத்துப் பணிகளும் முடிவுற்று தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

குற்றாலத்திற்கு வரும் பயணிகளுக்கு உடை மாற்றும் அறை, குடிநீா், கழிப்பறை, சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அருவிப் பகுதியில் குப்பைகள் தேங்காத வண்ணம் உடனுக்குடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அருவியைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளை ஒருங்கிணைந்து வணிக நிறுவனங்களில் நெகிழி பயன்பாட்டை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், சாலைகள், அதற்குரிய வழித்தடங்களை சீரமைக்க வேண்டும். அருவிப் பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரா. சங்கா், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் புஷ்பராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.