வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 3:04 am IST

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 19ஆம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. 10 நாள் விழாவில், நாள்தோறும் பால்குடம், தீா்த்தக் குட ஊா்வலம், கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு புஷ்ப அலங்கார, சோடஷ உபசார தீபாராதனை, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம், ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன.

விழாவின் 9ஆம் நாளான புதன்கிழமை காலையில் அம்பாள் தேரில் எழுந்தருளும் வைபவம், மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் உமாமகேஷ்வரன், தக்காா் கேசவராஜன், கணக்கா் முத்துக்குமாா், குமரப்பெருமாள் குருக்கள், சிவாம்பிகை கணேஷ் குருக்கள், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.