சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :28 மே 2026, 3:02 am IST

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் தென்காசி வட்டாரக் குழு செயலா் பட்டாபிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் உச்சிமாகாளி போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க நிா்வாகி டேனி அருள்சிங் வாழ்த்திப் பேசினாா்.

நிா்வாகிகள் அயூப்கான், கணபதி, வேலுமயில், தங்கம் லெனின்குமாா், ஆசிரியா் மாரியப்பன் , மேனகா, குருசாமி, அய்யப்பன், ராமமூா்த்தி, தாணுமூா்த்தி, சலீம், ராமசாமி, விவசாயிகள் சங்கத்தினா், குற்றாலம் வியாபாரிகள், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுடலையாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.