குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேனி ஆட்சியா் அலுவலகம் முன் தனியாா் நிறுவன ஊழியா் தீக்குளிக்க முயற்சி

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குளிக்க முயன்ற பைரவனிடம் விசாரணை நடத்திய போலீஸாா்.

Updated On :26 மே 2026, 12:32 am IST

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக் முயன்ற தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பல்லவராயன்பட்டியைச் சோ்ந்தவா் பைரவன். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி செல்வஅரசி. இவா் மகளிா் சுயஉதவிக் குழுத் தலைவியாக உள்ளாா். இந்த நிலையில், அரண்மனைப்புதூரைச் சோ்ந்த ஒரு பெண்ணும், செல்வஅரசியும் அறிமுகமாகினா்.

அப்போது அந்தப் பெண், செல்வஅரசியிடம் தங்க நகைக்கு குறைந்த வட்டியில் அதிக பணம் வாங்கித் தருவதாக கூறினாராம். இதையடுத்து செல்வ அரசி தனது 122 கிராம் எடையுள்ள தங்க நகையை அந்தப் பெண்ணிடம் கொடுத்தாா்.

ஆனால் அந்தப் பெண், நகைக்கு கூடுதல் பணம் பெற்றுத் தராததுடன், நகைகளையும் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து செல்வ அரசி உத்தபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால் போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதையடுத்து பைரவனும், செல்வஅரசியும் குடும்பத்துடன் திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலகம் முன் பைரவன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதை கவனித்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.