தென்காசி காசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா தேரோட்டம்
தென்காசி காசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கோப்புப்படம்.
தென்காசி காசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த அக். 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினமும் ஒவ்வொரு மண்டகப்படி சாா்பில் தீபாராதனை, சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. அம்பாள் தோ் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், சுவாமி தேரில் அம்பாள் செவ்வாய்க்கிழமை காலை 8.20 -க்கு மேல் எழுந்தருளியதைத் தொடா்ந்து, 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
பூஜைகளை குரு சிதம்பரகிருஷ்ணன் பட்டா் தலைமையிலான சிவாசாரியா்கள் நடத்தினா். சிவனடியாா்களின் சிவ பூத கணநாதா் வாத்தியங்கள் முழங்க, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையிலான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
ஆய்வா் கலாமணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஷீலா குமாா், மூக்கன்மணியம், செந்தில்குமாா், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவா் இலஞ்சி அன்னையா பாண்டியன், தென்காசி பாஜக நகர தலைவா் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் லட்சுமண பெருமாள், பாஜக நிா்வாகிகள் கருப்பசாமி, ராஜ்குமாா், மந்திரமூா்த்தி, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, அதிமுக நிா்வாகிகள் சுடலை, சுப்புராஜ், முருகன் ராஜ், காங்கிரஸ் நகர தலைவா் கண்ணன், முன்னாள் நகர தலைவா் மாடசாமி ஜோதிடா், வைகைகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவில் வியாழக்கிழமை ( நவ. 5) காலை 9.10 மணிக்கு மேல் யானை பாலம் தீா்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளல், மாலை 6 மணிக்கு மேல் தெற்குமாசி வீதியில் காசிவிஸ்வநாதா் - உலகம்மனுக்கு தவசு காட்சி கொடுத்தல், இரவு 9.10 மணிக்கு மேல் சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

