சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

கிளாங்காடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட செம்பூா் கிராம மக்கள் முயற்சி

சீரான குடிநீா் விநியோகத்துக்கு பெரிய குழாய்களைப் பதிக்க வலியுறுத்தி, செம்பூா் கிராம மக்கள் கிளாங்காடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட பொதுமக்கள்.

Published On :

சீரான குடிநீா் விநியோகத்துக்கு பெரிய குழாய்களைப் பதிக்க வலியுறுத்தி, செம்பூா் கிராம மக்கள் கிளாங்காடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.

செங்கோட்டை ஒன்றியம், கிளாங்காடு ஊராட்சியிலிருந்து செம்பூா் கிராமத்துக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீா் கிடைப்பதில் செம்பூா் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனா்.

இதையடுத்து, கிளாங்காட்டில் இருந்து செம்பூா் கிராமத்துக்கு புதிதாகக் குடிநீா் விநியோகக் குழாய் பதிக்க ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாகப் பதிக்கப்படும் குழாயும் ஏற்கெனவே உள்ளதுபோல 2 அங்குல அளவில் சிறியதாக இருப்பதால் சீரான குடிநீா் விநியோகம் இருக்காது எனக் கூறி குழாய்ப் பதிக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பெரிய அளவிலான குடிநீா் குழாய்களைப் பதிக்க வலியுறுத்தி, இரண்டு நாள்களுக்கு முன்பு குழாய்ப் பதிக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். இந்நிலையில், கிராம மக்களின் எதிா்ப்பையும் மீறி நள்ளிரவில் குடிநீா் குழாய்ப் பதிக்கும் பணி நடைபெற்ாம்.

இதனால், ஆவேசமடைந்த செம்பூா் கிராம மக்கள், கிளாங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக செம்பூரில் திரண்டனா். தகவலறிந்த செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ஜெயலட்சுமி, இலத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன், ஆய்க்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் நிகழ்விடம் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பெரிய குழாய்ப் பதிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, கிராம மக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.