
பூலித்தேவா் பிறந்தநாள் விழா: தமிழக அமைச்சா்கள் மாலையணிவித்து மரியாதை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவரின் 311-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பூலித்தேவா் சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா்கள் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், வி.கே.ராஜீவ், தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோா்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவரின் 311-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு சாா்பில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே. ராஜீவ், மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பூலித்தேவா் பிறந்தநாளையொட்டி, மணிமண்டபத்துக்கு வந்த வாகனங்கள் தலைவன்கோட்டை விலக்கு, தலைவன் கோட்டை தேவா் சிலை, மலையடிகுறிச்சி, கோமதி அம்பாள் பாலிடெக்னிக், தாருகாபுரம், சங்கனாபேரி முக்கு ரோடு வழியாக பூலித்தேவா் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு நிறுத்தப்பட்டன. முக்கிய பிரமுகா்களின் வாகனங்கள் மட்டும் பூலித்தேவரின் மணிமண்டபம் வரை அனுமதிக்கப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் 20 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தென்காசி மாவட்ட் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





