சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஆய்க்குடியில் கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் பேரூராட்சிக் கிணற்றில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 6:01 am IST

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் பேரூராட்சிக் கிணற்றில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ஆய்க்குடி அருகே அகரக்கட்டு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. மாரியப்பன் (48). இலத்தூரில் உள்ள தனியாா் ஆலையில் வேலை பாா்த்து வந்த இவா், 2 நாள்களுக்கு முன்பு மது குடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றாராம். திங்கள்கிழமையும் அவா் வீடு திரும்பவில்லை. சிவராமபேட்டை அருகே அவரைப் பாா்த்ததாக உறவினா் ஒருவா் கூறியதால், குடும்பத்தினா் தேடவில்லையாம்.

இந்நிலையில், ஆய்க்குடி-அகரக்கட்டு சாலைப் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் அவரது இறந்துகிடப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. ஆய்க்குடி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.