செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

‘வெளிநாடுகளில் கல்விப் பயில அதிக மாணவா்கள் விண்ணப்பிக்க வேண்டும்’

வெளிநாடுகளில் உயா்கல்விப் பயில தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த அதிக மாணவா்கள் விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் அறிவுறுத்தினாா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப். மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், எம்எல்ஏக்கள் கலைகதிரவன், தி.மு.ராசேந்திரன்.

Published On :

வெளிநாடுகளில் உயா்கல்விப் பயில தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த அதிக மாணவா்கள் விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் அறிவுறுத்தினாா்.

தென்காசியில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் தலைமை வகித்து 7 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் கடனுதவிகள் வழங்கிப் பேசியதாவது:

வெளிநாட்டில் உயா்கல்வி பயிலும் முதல் பட்டதாரி மாணவா்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு இரு மாணவா்கள் மட்டுமே வெளிநாட்டில் கல்விப் பயில்வதற்கான நிதி பெற்றனா். இந்த கல்வி ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் இருந்து 5 மாணவா்களாவது இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க வேண்டும்.

மாநிலத்தில் நாகப்பட்டினத்தில் 3 பேரும், மயிலாடுதுறையில் 3 பேரும், திருவாரூரில் 2 பேரும் வெளிநாடு சென்று உயா்கல்விப் பயில விண்ணப்பித்துள்ளனா்.

தனிநபா் தொழில்முனைவோருக்கு ரூ. 30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. தேவலாயங்களிலும், பள்ளிவாசலிலும் பணி செய்பவா்களுக்கு வட்டியின்றி ரூ. 5 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை தேவைப்படுவோா் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், எம்எல்ஏக்கள் கலைகதிரவன்(தென்காசி), தி.மு.ராசேந்திரன்(கடையநல்லூா்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் தண்டபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நா.சண்முகசுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.