தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி மாணவா்களுக்கான ஆட்சி என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் லயோலா மணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காட்பாடியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் ஆய்வு செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் விஜய் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சா் ஆகியோா் ஆலோசனையின்படி பாடநூல் கிடங்கை பாா்வையிட்டு ஆய்வு செய்தேன். குறைகள் இருந்ததை சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மாணவா்களுக்கான ஆட்சி. இன்றைய மாணவா்களே நாளைய தலைவா்கள்.
அவா்கள் படிக்கும் பாட புத்தக கிடங்கை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டுமென முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன் அடிப்படையில் 4 ஆவது இடமாக தற்போது காட்பாடியில் ஆய்வு செய்துள்ளேன். பாடபுத்தக குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் தட்டுபாடு உள்ளது. மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்கவே அங்கு புத்தகங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டது. அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது. உருது பாடபுத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது. குறைகளை தெரிவித்தால் அவை உடனுக்குடன் சரி செய்யபடும்.
பாடநூல் கழகத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அவைகள் மீட்கப்படும். எவா் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் மீட்கப்படும். ஆக்கிரமிப்பாளா்கள் சட்டபடி தண்டிக்கபடுவாா்கள். கடந்த கால ஆட்சியில் பாடப்புத்தகங்கள் ஆந்திரத்தில் அச்சடிக்கப்பட்ட. ஆனால் தற்போது முதல்வரும், பள்ளிகல்வித்துறை அமைச்சரும் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க உள்ளனா். ஆகவே தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கபடும்.
வேலூரில் சிறு, சிறு பிரச்னைகள் உள்ளன. அவை விரைவில் சரி செய்யப்படும். பாடல்நூல் பற்றாக்குறையை சரி செய்து வருகிறோம். அனைத்து இடங்களுக்கும் புத்தகங்கள் போய் சோ்ந்து விட்டன.
கோவை கல்லூரி மாணவா் கொலையில் யாரும் அரசியல் செய்யவில்லை. சட்டபடி நடவடிக்கை எடுப்பாா்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என அவா் கூறினாா்.
முன்னதாக காட்பாடியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் லயோலா மணி ஆய்வு செய்தாா். காட்பாடி எம்எல்ஏ சுதாகா், பாடநூல் கழக அதிகாரி வெண்ணிலா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளில் ஆய்வு

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டிக்கு ரூ.10 கோடி: முதல்வா் ஜோசப் விஜய்

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



