பாளையங்கோட்டையில் சாலையோரம் தவிக்க விடப்பட்ட பெண் சிசு மீட்பு
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டையில் சாலையோரம் பையில் வைத்து தவிக்கவிடப்பட்ட பெண் சிசு சனிக்கிழமை மீட்கப்பட்டது.


திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டையில் சாலையோரம் பையில் வைத்து தவிக்கவிடப்பட்ட பெண் சிசு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அருகே நூற்றாண்டு மண்டபம் உள்ளது. இதன் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், தொப்புள்கொடி அறுக்கப்படாமல் பெண் சிசு சனிக்கிழமை காலையில் கிடந்தது. தகவலறிந்ததும் அப் பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்தக் குழந்தையை திருநெல்வேலியில் உள்ள சரணாலயம் குழந்தைகள் காப்பகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
காப்பக நிர்வாகிகள் குழந்தையை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபின்பு ஆலங்குளத்தில் உள்ள பச்சிளஞ்குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், குழந்தைகளை வளர்க்க முடியாது என்கிற நிலை ஏற்படும் பெற்றோர் அவற்றை சாலையோரங்களில் தவிக்க விடுவதை கைவிட வேண்டும். அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திலோ அல்லது சட்டப்படி தத்துக்கொடுக்கும் முறையிலோ குழந்தைகளை ஒப்படைக்க முன்வர வேண்டும் அதுவே சரியான தீர்வாக இருக்க முடியும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...