ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை: அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

பதவி உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துத்துவமனைகளில் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2014, 10:19 am

ஷேக் அப்துல்காதர்

பதவி உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துத்துவமனைகளில் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

சுகாதாரத்துறையில் செவிலியர்கள் 30 வருடங்களாக பதவி உயர்வு இல்லாமல் பணி செய்து வருகின்றனர். பிற மருத்துவப் பணியாளர்களைபோல செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வரும் 6 ஆயிரம் செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

3 ஆண்டுகள் பயிற்சி முடிந்து தொடர்ந்து பணியில் இருக்கும் சுமார் 3 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணி செய்து வரும் செவிலியர்கள் திங்கள்கிழமை கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 400 செவிலியர்கள் திங்கள்கிழமை கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 450 செவிலியர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றார் தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கச் செயலர் ஜெயலட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.