இருசக்கர வாகன பழுதுபார்த்தல் பயிற்சி: ஜன.8 வரை விண்ணப்பிக்கலாம்

இருசக்கர வாகன பழுதுபார்த்தல் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 8 ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

இருசக்கர வாகன பழுதுபார்த்தல் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 8 ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 30 நாள்களுக்கு இலவச இருசக்கர வாகன பழுதுபார்த்தல் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 40 வயதுக்குள்பட்டவர்கள் பயிற்சியில் சேரலாம்.
   கிராமப்புற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் இருசக்கர வாகன பழுதுபார்த்தல் தொடர்பான நேரடி செய்முறைப் பயிற்சி மற்றும் பயிற்சியாளர்களுக்குத் தேவையான தொழில்நுணுக்கம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.  பயிற்சியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். மேலும், வங்கிக் கடனுதவிக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். 
  பயிற்சியில் பங்கேற்ற விரும்புவோர் விண்ணப்பங்களை இயக்குநர், ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மகாராஜநகர், திருநெல்வேலி-11 என்ற முகவரிக்கு ஜனவரி 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0462-2574265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com