மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
மனிநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலர் மைதீன், மாவட்ட துணைத் தலைவர் மகபூப் ஜான், மாவட்ட துணைச் செயலர் ரசூல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக அக்கட்சியினர் கூறியது: மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
அதனால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக கடந்த வாரமே அறிவித்தோம். அப்போதும் நடவடிக்கை இல்லை. அதன் காரணமாகவே இப்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.