தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இந்தியன் வங்கி சார்பில் ஊழல் விழிப்புணர்வு நடைப்பயணம்

இந்தியன் வங்கி சார்பில் ஊழல்  விழிப்புணர்வு நடைப்பயணம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:07 am

DIN

இந்தியன் வங்கி சார்பில் ஊழல்  விழிப்புணர்வு நடைப்பயணம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியன் வங்கி சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஊழல் விழிப்புணர்வு நடைப்பயணம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்  கல்லூரியில் தொடங்கி பாளையங்கோட்டை இந்தியன் வங்கி கிளையில் நிறைவடைந்தது.
திருநெல்வேலி மண்டல மேலாளர் வீ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நடை பயணத்தில் திருநெல்வேலி நகர இந்தியன் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மண்டல அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  பேரணியின் முடிவில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுதவிர மாணவர்களுக்கு ஊழலுக்கு எதிரான கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கிராம  சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
ஐஓபி சார்பில்... இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திருநெல்வேலி மண்டலத்தின் சார்பில் அதன் 69 கிளைகள் மற்றும் மண்டல அலுவலகத்தில் ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 அனைத்து கிராம கிளைகளின் மூலம்112 கிராம சபைகள் ஏற்படுத்தப்பட்டு "ஊழலற்ற' இந்தியா என்ற தலைப்பில் கூட்டங்கள் நடைபெறுகின்றன.  அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் "ஊழலற்ற இந்தியா' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலுமுள்ள 10 கல்லூரிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திருநெல்வேலி மண்டல முதன்மை மேலாளர் இ.ராஜகுமார், முதன்மை மேலாளர்கள் தேவதாஜ் சாம்ராஜ், பத்மசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.