மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆசிரியையை அரிவாளால் தாக்கி நகைப்பறிப்பு

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே முதியவரைக் கட்டிப்போட்டு அரசுப் பள்ளி ஆசிரியையை அரிவாளால் வெட்டிவிட்டு 12 பவுன் நகையைப் பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:52 pm

DIN

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே முதியவரைக் கட்டிப்போட்டு அரசுப் பள்ளி ஆசிரியையை அரிவாளால் வெட்டிவிட்டு 12 பவுன் நகையைப் பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தச்சநல்லூர் கரையிருப்பு அடுத்த வினோத்ராம் நகரைச் சேர்ந்தவர் அருணாசலம் (67).  இவரது மனைவி சகுந்தலா. இவர்களது மகள் தேவி (32), கயத்தாறு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை இரவு வீட்டில் மூன்று பேரும் இருந்தனராம். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் அருணாசலத்தைக் கட்டிப் போட்டதோடு,  சகுந்தலாவை தாக்கி கீழே தள்ளினராம்.
பின்னர் அந்தக் கும்பல் தேவியின் கையில் அரிவாளால் வெட்டியதோடு, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, சகுந்தலாவின் 3 பவுன் கம்மல், பீரோவில் இருந்த 4 பவுன் நகை,  ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.  திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.