பாளையங்கோட்டையில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவுச் சங்கத் தேர்தலின்போது தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவேண்டும், தேர்தல் அலுவலர்களை தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும், இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் அலுவலகங்களில் அலுவலர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராமசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கோமதிநாயகம், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பால்துரை, மாவட்டச் செயலர் சுப்பு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









